இலங்கை சென்றால் நான் கொல்லப்படுவேன்... பகீர் கிளப்பும் மதுரை ஆதீனம்!

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

"நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன்" என்று மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் தெரிவித்துள்ளார்.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்களையும் வெற்றி பெற்ற செய்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். மீண்டும் பிரதமராகியுள்ள மோடியை நேரில் சந்தித்து தமிழீழத்துக்காக கோரிக்கை வைப்பேன். நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கினார். நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார். காமராஜரையே தோற்கடித்தார்கள் அது தான் தேர்தல் ஜனநாயகம். ஆட்சியில் இருந்தால் திட்டத்தான் செய்வார்கள். திட்ட திட்ட திண்டுக்கல்லு, வைய வைய வைரக்கல்லு, ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் பாஜக வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள். இது ஜனநாயக நாடு. வெற்றி தோல்வி மக்கள் அளிப்பது தான். மக்களிடம் பாஜக மீது அதிருப்தி இல்லை. காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள், ஆனால் பாஜக அப்படி பண்ணவில்லை" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in