ராஜேஷ் தாஸ்
ராஜேஷ் தாஸ்

2 நீதிமன்றங்களும் தண்டித்த ராஜேஷ் தாஸுக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?... உயர் நீதிமன்றம் கேள்வி

சாதாரண மனிதன், குண்டுமணியை திருடினால் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ் தாஸ்-க்கு எப்படி சலுகை காட்ட முடியும் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட  தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம். தண்டபானி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, ராஜேஷ் தாஸ் தரப்பில், "பல ஆண்டுகளாக காவல் துறைக்கு தலைமை வகித்த நிலையில், சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மேல் முறையீட்டில் ஒருவேளை தான் விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆகும்?" என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து, முதலில் சரணடைந்து விட்டு பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அது குறித்து பரிசீலிக்கலாமே என தெரிவித்த நீதிபதி, "சாதாரண மனிதன், குண்டுமணியை திருடினால் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு 90 நாட்கள் கழித்து தான் ஜாமீன் கிடைக்கிறது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன? அந்த மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதா?" என்று கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், "ராஜேஷ் தாஸ்க்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in