நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கொடிக் கம்பங்களை உடனே அகற்றவும்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான மேடையாக பயன்படுத்துகின்றனர். கொடி கம்பங்களை நடுவதால், பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

கொடி கம்பங்கள்
கொடி கம்பங்கள்

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், 45 இடங்களில் 89 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 இடங்களில் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து,  தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.  அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணையை மார்ச் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளை வழக்கில் சேர்ப்பதற்கு மனுதாரருக்கு அனுமதி அளித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரமலான் நோன்பு... முஸ்லிம் அரசு ஊழியர்களின் பணி நேரத்தில் திடீர் மாற்றம்!

சமயபுரம் கோயிலில் தீ விபத்து... பூசாரிகளுக்கு தீக்காயம்; பக்தர்கள் அதிர்ச்சி!

காளிக்கு நள்ளிரவில் காளி பூஜை... பண்ணை வீட்டில் மண்டை ஓடுகளால் பரபரப்பு!

குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற இடத்தில் போலீஸாரை தாக்கிய கும்பல்... பரபர சிசிடிவி காட்சிகள்!

இயக்குநர், நடிகர் சூரியகிரண் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in