தேசத்தை வாட்டி வதைக்கும் வெப்ப அலை... 50-க்கும் மேற்பட்டோர் பலியானதில் அதிர்ச்சி

இந்தியாவில் வெப்ப அலை
இந்தியாவில் வெப்ப அலை
Updated on
2 min read

இதுவரையில்லாத வகையில் வட இந்தியாவை வெப்ப அலை அலைக்கழித்து வருகிறது. தேர்தல் பணியாளர்கள் முதல் சாமானியர்கள் வரை வெப்ப அலைக்கு பலியானவர்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது அதிர்ச்சி அளித்து வருகிறது.

இந்தியாவின் பல பிராந்தியங்கள் கோடை வெயிலின் கடுமையான தாக்கத்துக்கு ஆளாகி வருகின்றன. குறிப்பாக வடமேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் வெப்ப அலை வீச்சு அதிகரித்து வருவதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சில தினங்களில் மனித உயிர்களின் இறப்பு எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளது. பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை பரவல் காரணமாக உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் வெப்ப அலை
இந்தியாவில் வெப்ப அலை

"குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசாவில் வெப்ப அலை காரணத்திலான உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்த பகுதிகளில் நாளை முதல் வெப்ப அலையின் வீச்சு படிப்படியாக குறையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் பீகார் மாநிலத்தைப் பொறுத்தளவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 வாக்குச்சாவடி பணியாளர்கள் உட்பட 14 பேர் வெப்பத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான இறப்புகள் போஜ்பூர் பகுதியில் பதிவாகியுள்ளன, அங்கு தேர்தல் பணியில் இருந்த ஐந்து அதிகாரிகள் வெப்ப அலை தாக்கத்தால் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

வெப்ப அலை
வெப்ப அலை

ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தளவில் இன்று ஒரே நாளில் மட்டும் நான்கு பேர் வெப்ப அலைக்கு பலியாயினர். மேலும் 1,326 பேர் கடுமையான வெயில் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும், வழக்கமான மருத்துவ வசதிகளுடன் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என ஏசி அறைகள் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தைப் பொறுத்தளவில் ரூர்கேலா நகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10 பேர் வெப்பத் தாக்குதலால் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி ஒருசில மணி நேரங்களில் இறப்புகள் நிகழ்ந்தன. அதில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் சுருண்டு விழுந்து இறந்தனர். இது தவிர்த்து வெப்ப அலை தொடர்பான சந்தேகத்துக்கு மரணங்கள் அதிகம் பதிவாகி உள்ளன. இந்த மரணங்களுக்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே உறுதிப்படுத்தப்பட இருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in