மூன்றாம் பாலினத்தவர் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்வது கட்டாயமா?... பாஸ்போர்ட் வழக்கில் மத்திய அரசுக்கு கேள்வி!

கோப்புப்படம்
கோப்புப்படம்

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்ற பாஸ்போர்ட் விதியை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை எதிர்த்து மயிலாப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்ற அரசு சாரா அமைப்பை சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மாற்றுப் பாலினத்தவர்
மாற்றுப் பாலினத்தவர்

அந்த மனுவில், 'அறுவை சிகிச்சை மூலம் மூன்றாம் பாலினத்தவராக மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெற மருத்துவமனையின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்ற விதி, அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள சம உரிமைக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், அறுவை சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரும் பிரிவை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, 'இயற்கையிலேயே மூன்றாம் பாலினத்தவராக இருந்தால் அவருக்கு இந்த விதி பொருந்தாது. அதே நேரத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாறும் மூன்றாம் பாலினத்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழ் கட்டாயம்' என மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 29 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in