சிங்கங்களை பாதுகாக்க ரூ.277 கோடி - குஜராத் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆசிய சிங்கம்
ஆசிய சிங்கம்

சிங்கங்களைப் பாதுகாப்பதற்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.277 கோடிக்கு மேல் அரசு செலவழித்துள்ளதாக குஜராத் மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் முகேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவையில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் முகேஷ் படேல் பதில் அளித்தார். அவர், “ஆசிய சிங்கங்கள், கிர் மற்றும் கிரேட்டர் கிர் பகுதிகளில் இருப்பிடமாக கொண்டுள்ளது. இங்கு கடந்த 2020, ஜூன் மாதத்தில் கணக்கெடுப்பின்படி, 674 ஆசிய சிங்கங்கள் உள்ளன. 238 சிங்கங்கள் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இறந்தது. அதில், 209 சிங்கங்கள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்தது. 29 சிங்கங்கள் வாகனங்களில் அடிபடுவது அல்லது திறந்தவெளி கிணற்றில் விழுந்தது போன்ற இயற்கைக்கு மாறான காரணங்களால் இறந்துள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிய சிங்கம்
ஆசிய சிங்கம்

மேலும், “”'லயன்' திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவ வசதியை நிறுவ ஜூனாகத் நகருக்கு அருகில் 50 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஏற்கனவே தேர்வு செய்துள்ளது. குஜராத்தில் முதன்முறையாக வனவிலங்கு மருத்துவமனையாகவும், விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆய்வு செய்யும் மையமாகவும் இது செயல்பட உள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, குஜராத்தில் கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். குஜராத் மக்களுக்கும், இந்த முயற்சிக்கு வழிவகுத்த அனைவருக்கும் பெருமை என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in