அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டிப் படுகொலை: பள்ளிக்குச் சென்றபோது மர்மகும்பல் வெறிச்செயல்

கொலை
கொலை

கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மர்ம கும்பல் வழிமறித்து, அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இடைநிலை ஆசிரியராக கண்ணன்(51) என்பவர் பணியாற்றி வந்தார். இன்று பள்ளி திறக்கப்பட்டதால், வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கண்ணன், கே.பாப்பாங்குளம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

சடலத்தை மீட்ட போலீசார்
சடலத்தை மீட்ட போலீசார்

அப்போது, கே.பாப்பாங்குளம் அருகே இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்மகும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கமுதி போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணனை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே கண்ணன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை
அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை

முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த இன்று, அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in