சுற்றுலாப் பயணிகளுக்கு குட்நியூஸ்; நாளை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை இல்லை!

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்ததால், பள்ளிகள் திறப்பை ஜூன் 10ம் தேதிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன்.4) அன்று வழக்கம் போல் பூங்கா திறந்திருக்கும். வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் நெகிழி பொருள்களை எடுத்துவர வேண்டாம்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அதில் சிறுத்தை, வெள்ளைப் புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீர்நாய், சிங்கங்கள் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in