ஒடிசாவில் முதல் முறையாக பாஜக ஆட்சி; புதிய முதல்வர் யார்?

ஒடிசாவில் பாஜக ஆட்சி
ஒடிசாவில் பாஜக ஆட்சி

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளத்தின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து புதிதாக ஆட்சி அமைக்க உள்ள பாஜகவின் முதல்வர் தேர்வு யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது.

இதில் ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் 25 ஆண்டுகால சாம்ராஜ்யம் இந்தத் தேர்தலுடன் முடிவுக்கு வந்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

பாஜக, பிஜு ஜனதா தளம்
பாஜக, பிஜு ஜனதா தளம்

பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓர் இடத்திலும், சுயேச்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நவீன் பட்நாயக், நேற்று ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரகுபர் தாஸிடம் அளித்தார்.

இந்நிலையில், பாஜக அம்மாநிலத்தில் தனது முதல் ஆட்சிக்கு யாரை முதல்வராக தேர்ந்தெடுக்கும் என்பது தான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பழங்குடியினர் தலைவர் ஜுவல் ஓரம் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபட்டு வரும் நிலையில், எதிர்பாராத விதமாக மற்றொரு பெயர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, முன்னாள் ஆடிட்டர் ஜெனரல் கிரிஷ் சந்திர முர்முவின் பெயர் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபட்டு வருகிறது.

ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம்

இது தொடர்பாக அம்மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் கூறுகையில், "கட்சியின் பார்லிமென்ட் குழு, முதல்வர் யார் என்பதை ஓரிரு நாளில் முடிவு செய்யும். பாஜகவின் புதிய முதல்வர் ஜூன் 10ம் தேதி பதவியேற்பார்.

முதல்வர் தேர்வு பிரதமர் நிர்ணயித்த அளவுகோல்களின் அடிப்படையில் இருக்கும். மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் ஒடியா, அடுத்த முதல்வராக இருப்பார்." என்றார்.

கிரிஷ் சந்திர முர்மு
கிரிஷ் சந்திர முர்மு

குஜராத் பிரிவு அதிகாரியான கிரிஷ் சந்திர முர்மு கடந்த 2020 வரை ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தொடக்க கால துணை நிலை ஆளுநராக இருந்தார். மேபஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஷ் சந்திர முர்மு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவர் மோடி அரசில் உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார். மேலும், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரின் முதன்மை செயலாளராக இருந்தார். மோடி, அமித் ஷாவால் மிகவும் விரும்பத்தக்கவராக கிரிஷ் சந்திர முர்மு கருதப்படுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in