ஸ்பூனில் பால் குடிக்கும் பாலகர்... ராகுலை கடுமையாக விமர்சித்த குலாம்நபி ஆசாத்!

குலாம்நபி ஆசாத்
குலாம்நபி ஆசாத்

பாஜக ஆளும் மாநிலங்களில் போட்டியிட ராகுல் காந்தி அஞ்சுவது ஏன் என்று காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசம் அமேதியில் ராகுல் போட்டியிடத் தயங்குவதை அடுத்து அவர் இக்கேள்வியை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸின் முக்கிய மூத்த தலைவராக இருந்தவர் குலாம்நபி ஆசாத். காஷ்மீரை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ஜனநாயகப் புரட்சி ஆசாத் கட்சி (டிபிஏபி) என்ற கட்சியை புதிதாகத் துவங்கினார். அப்போது முதல் ஆசாத் தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகிறார்.

இந்த முறை மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிபிஏபி தலைவர் ஆசாத் காங்கிரஸின் ராகுலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் ராகுல் போட்டியிடத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவையும் அவர் விமர்சித்துள்ளார்.

ராகுல் - ஆசாத்
ராகுல் - ஆசாத்

உதாம்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஆசாத், "பாஜகவை கடுமையாக எதிர்ப்பதாக ராகுல் பேசி வருகிறார். ஆனால், அவரது நடவடிக்கைகள் அவர் பேசியதற்கு எதிராக அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களை விடுத்து அவர் போட்டியிட சிறுபான்மையினர் நிறைந்த கேரளாவின் தொகுதியை தேர்வு செய்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் "ராகுல், உமர் அப்துல்லா ஆகியோர் அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் இன்னும் ஸ்பூனில் பால் குடிக்கும் பாலகர்கள். இவர்கள் இதுவரை எந்தத் தியாகங்களும் செய்யவில்லை. தங்கள் மூத்த தலைவர்களான இந்திரா காந்தி, ஷேக் அப்துல்லா போன்றவர்களுக்கு கிடைத்த அரசியல் செல்வாக்கை இவர்கள் அனுபவித்து வருகின்றனர்"என்றார்.

ராகுல் - உமர் அப்துல்லா
ராகுல் - உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவும் அம்மாநிலத்தின் பாரமுலா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆசாத்தின் டிபிஏபியும் போட்டியிடுகிறது. கேரளாவின் வயநாடு எம்பி-யான ராகுல் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். இவர், உபியின் அமேதியில் 2004 முதல் 2014 வரை எம்பியாக இருந்தவர். 2019 மக்களவை தேர்தலில் அமேதியிலும் போட்டியிட்ட ராகுல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார்.

மற்றொரு தொகுதியான வயநாடு ராகுலுக்கு வெற்றியை அளித்தது. அமேதியில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால், ராகுல் அங்கு மீண்டும் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி நீடிக்கும் நிலையில், அவரை குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in