நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் இடமாற்றம்: காங்கிரஸ் கடும் கண்டனம்

நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சிலைகள் இடமாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சிலைகள் இடமாற்றம்

நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோரின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதிய அரசு அமைந்ததும் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு வசதியாக அங்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சூழலில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம்

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "சத்ரபதி சிவாஜி மகராஜ், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்றத்துக்கு முன்னால் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடூரமானது" என்றார்.

இதேபோல், காங்கிரஸ் காங்கிரஸ் ஊடக பிரிவுத் தலைவர் பவன் கேரா கூறுகையில், “மகாராஷ்டிரா வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால், சத்ரபதி சிவாஜி மற்றும் அம்பேத்கரின் சிலைகள் நாடாளுமன்றத்தில் அவை இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

சற்று யோசித்துப் பாருங்கள், அவர்களுக்கு 400 தொகுதிகளுக்கும் மேல் கிடைத்திருந்தால், அரசியலமைப்பு சாசனத்தை காப்பாற்றியிருப்பார்களா?" என குற்றம் சாட்டியுள்ளார்.

நான்கு வெவ்வேறு கட்டிடங்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற முழு வளாகத்தையும் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் நிறைவடைந்து இம்மாதம் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கூடும்போது, நாடாளுமன்ற வளாகம் புதிய தோற்றத்தில் இருக்கும்.

வெளிப்புற பகுதிகளை மறு சீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, சத்ரபதி சிவாஜி மற்றும் மகாத்மா ஜோதிபா பூலே உள்ளிட்ட நாட்டின் அடையாளமாக உள்ள தலைவர்களின் சிலைகள், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் கேட் எண் 5க்கு அருகில் உள்ள புல்வெளிக்கு மாற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் பராமரிப்பு பணி
நாடாளுமன்ற வளாகத்தில் பராமரிப்பு பணி

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் குடியரசுத் தலைவரும், பிரதமரும் நுழைய பயன்படுத்தும் கஜா துவார பகுதியில் ஒரு பரந்த புல்வெளியை உருவாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in