ஜீவதார பிரச்சினைகளுக்கு நகைச்சுவையாக பதில் அளிப்பதா? ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

துரைமுருகன்
துரைமுருகன்
Updated on
2 min read

"தமிழகத்தின் உரிமையை காப்பதில் திமுக அரசு கள்ள மவுனம் காத்து வருகிறது. தமிழர்களின் ஜீவாதார பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளிப்பதா?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், "தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கோடை மழை தற்போது வரை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகி மதுரை, கன்னியாகுமரி திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மே 22 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகியுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டு விளைப்பொருள்கள் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது. சேதம் அடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க உடனடி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

கோடை மழை
கோடை மழை

இதுவரையில் கோடை மழையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல கால்நடைகள், பயிர்களுக்கும் சேதாரம் ஏற்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையிலே இந்த மானியங்களை, நிவாரண நிதிகளை, இழப்பீடுகளை தர வேண்டும்.

அமராவதி பிரச்சினை, பாலாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர், அதிமுக ஆட்சியில் இருந்த போது குரல் கொடுத்தார்கள். அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஆனால், நீர் ஆதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எப்போதும் போல நகைச்சுவையாக பதில் சொல்லி கடந்து செல்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

நாட்டு மக்களுடைய ஜீவாதார உரிமை பிரச்சினைகளை மிகுந்த அக்கறையோடு கவனத்தோடு கையாள வேண்டும். முல்லை பெரியாரில் மௌனம் சாதித்து வரும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்கள் குரல் வேதனை குரலாக கேட்டுக் கொண்டிருப்பது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு மட்டும் கேட்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!

சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!

வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in