வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

போத் கயாவில் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்
போத் கயாவில் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்
Updated on
1 min read

புத்த பூர்ணிமா பண்டிகையை ஒட்டி வடமாநிலங்களில் கங்கை மற்றும் யமுனை நதிகளில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பௌத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தரின் பிறந்த தினம், புத்த பூர்ணிமா என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பௌத்தர்கள் மட்டுமின்றி இந்துக்களும் நீர்நிலைகளில் புனித நீராடி இறைவனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இன்று நாடு முழுவதும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பீகாரில் உள்ள போத் கையா கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தர பிரதேசம் மாநிலம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் கரைகளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். ஹரித்வார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித தலங்களில் ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து நீர்நிலைகளில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இங்கு குவிந்து வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் குவிந்துள்ள பக்தர்கள்
ஹரித்வாரில் குவிந்துள்ள பக்தர்கள்

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கர் காலத்தில் இருந்து புத்த பூர்ணிமாவுக்கு வடமாநிலங்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வடமாநிலங்களில் பெரும்பாலான வங்கிகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in