திருச்சியில் அதிமுக வேட்பாளரை ஜெயிக்க வைத்தால் கார் பரிசு... நிர்வாகிகளுக்கு விஜயபாஸ்கரின் சூப்பர் அறிவிப்பு!

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

திருச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றிப் பெற வைக்கும் நகரச் செயலாளர், வட்டச் செயலாளருக்கு கார் மற்றும் 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசளிக்க உள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். வைகோவின் மகன் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்குவதால், திருச்சி தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இதே தொகுதியில், அதிமுக சார்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ப.கருப்பையா என்பவரை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சிபாரிசின் பேரில் அதிமுக தலைமை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதேபோல, அமமுக சார்பில் மாநகராட்சி கவுன்சிலராக இருந்த ப.செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டுப் பேரவையின் இளைஞரணி மாநில செயலாளரான ராஜேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

திருச்சி வேட்பாளர்கள்
திருச்சி வேட்பாளர்கள்

அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி தொகுதியில் வெற்றிப் பெற அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர், மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றிக்கு தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி, முன்னாள் எம்.பி ப.குமார் ஆகியோரும் தங்களது பிரச்சார வியூகங்களின் மூலம் இந்த முறை மலைக்கோட்டையை அதிமுகவின் வசமாக்குவது என்ற ரீதியில் தங்களது தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முக்கியமாக, தனது ஆதரவு வேட்பாளரான கருப்பையாவை எப்படியாவது வெற்றிப் பெற வைத்தே ஆக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, திருச்சி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று தந்து அதிமுகவை வெற்றிப் பெற வைக்கும் நகரச் செயலாளருக்கு இனோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியும் வழங்கப் போவதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பணிகளில் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in