மோடி 3.0 மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்கும் தேதி... அதிரடி கிளப்ப காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

மக்களவை
மக்களவை

மோடி 3.0 ஆட்சியின் மக்களவை முதலாவது கூட்டத்தொடர் ஜூன் 24 அன்று தொடங்கும் என தெரிய வருகிறது.

2024 மக்களவைத் தேர்தலின் நிறைவாக வெற்றிகரமாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அரியணையேறி உள்ளது. பாஜக பெரிதும் எதிர்பார்த்த தனிப்பெரும்பான்மை ஆட்சிக்கு வாய்ப்பு அமையாதபோதும், கூட்டணி கட்சிகளின் உதவியோடு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை பாஜக நிர்மாணித்துள்ளது.

மோடி பதவியேற்பு
மோடி பதவியேற்பு

மூன்றாம் முறையாக ஆட்சியில் பொறுப்பேற்றதும் பல்வேறு அதிரடிகளை நிறைவேற்றப்போவதாக தேர்தல் பிரச்சாரம் முதலே பாஜக கர்ஜித்து வந்தது. ஆனால் தனிப்பெரும்பான்மை கிட்டாததால் கூட்டணிகளின் தயவோடுதான் அவற்றை நிறைவேற்றியாக வேண்டும். ஆனால் அதற்கு வழியின்றி கொள்கையளவில் இந்த கூட்டணிக் கட்சிகள் பாஜகவிடம் முரண்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்த்தபோதும், ஆந்திராவில் ஆட்சியமைக்கும் அதன் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் முஸ்லிம் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு நிலைப்பாடினை எடுத்துள்ளது. அதே போன்று ராணுவத்துக்கு அதிகளவில் தயாராகும் இளைஞர்களைக் கொண்ட பீகாரில் அக்னிவீரர் திட்டத்துக்கு எதிர்ப்பு நிலவுவதால், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அத்திட்டத்தை திரும்பப்பெறுமாறு வலியுறுத்த இருக்கிறது.

கூட்டணி கட்சிகளுக்கு அடுத்தபடியாக பாஜகவுக்கு பெரும் நெருக்கடி தர காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தயாராக உள்ளன. அதிலும் முந்தைய பாஜக ஆட்சிகளைவிட தற்போது கணிசமான வெற்றி மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு என மக்களவையில் கெத்து காட்ட காங்கிரஸ் தயாராக உள்ளது. எதிர்க்கட்சித்தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு கட்டியம் கூறுவது போன்று, தேர்தல் முடிவுகள் வெளியான சூட்டில், பாஜகவுக்கு எதிரான ’பங்குச்சந்தை ஊழல்’ என்பதை ராகுல் காந்தி கையில் எடுத்திருந்தார்.

மோடி அமைச்சரவை
மோடி அமைச்சரவை

இவை உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகள் கூடிய 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 அன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அமர்வின் முதல் இரண்டு நாட்களில் பதவியேற்பார்கள். ஏழாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ராதா மோகன் சிங், கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

ஜூன் 27 அன்று அவையில் குடியரசுத் தலைவர்உரையாற்றுவார் என்றும், ஜூலை 3 அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரியவருகிறது. மேலும் முழுமையான பட்ஜெட் ஜூலை 22 அன்று தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிய வருகிறது. முன்னதாக பிப்ரவரி 1 அன்று, மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in