நீட் தேர்வு குளறுபடி குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா சிகிச்சையை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 10 முறைக்குமேல் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். மத்திய அரசின் சார்பில் குறிப்பாக குடியரசு தலைவர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், இங்கிருந்து நிறைவேற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர்கல்வித்துறைக்கும், மருத்துவக்கல்வித்துறை  நிர்வாகத்திற்கும் தொடர்ந்து 7 முறை சிறிய சிறிய விளக்கங்களை கேட்டு பதில்  கடிதம் அனுப்பினர். சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி அதற்கான பதிலையும் முறையாக அனுப்பி வைத்திருக்கிறோம். எனவே மத்திய அரசு, குடியரசு தலைவரிடத்தில் சொல்லி மாநில அரசுகள் விரும்புகிற வரையில் நீட் தேர்விலிருந்து விலக்கு தரவேண்டும் என்கின்ற வகையில் முடிவெடுப்பார்கள் என்று கருதுகிறோம்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் 67 மாணவர்கள் எடுத்துள்ளனர். தேர்விற்கான மதிப்பெண்கள் வழங்கும் விதிமுறைப்படி மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கினாலும் 718, 719 என மதிப்பெண்கள் வராது. 716 அல்லது 715 என்ற முறையில் தான் வரும். நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதுபோன்று வழங்குவதற்கு எப்போது உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது என்பது குறித்து எந்த வித தெளிவான விளக்கமும் இல்லை. தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கத்தினை ஏற்க முடியாது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நீட்டுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது வருகிறது. நீட் தேர்வில் தவறு நடக்கவில்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. நீட் தேர்வில் குளறுபடிகள் குறித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்வது குறித்து சட்ட துறையுடன் ஆலோசனை செய்து முடிவு எடுத்து வழக்கு தாக்கல் செய்யப்படும்” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in