பேப்பர் உருண்டையை வாயில் திணித்து 9 வயது சிறுவன் கொலை... தந்தை வெறிச்செயல்!

பேப்பர் உருண்டையை வாயில் திணித்து 9 வயது சிறுவன் கொலை... தந்தை வெறிச்செயல்!
Updated on
2 min read

குடிபோதையில் மகனின் வாயில் பேப்பர் உருண்டையைத் திணித்து அவனது தந்தையே கொலை செய்த சம்பவம் தானேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் காசர் பகுதியில் உள்ள வசாலா என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு 9 வயது சிறுவனின் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது இறந்து கிடந்த சிறுவனின் வாயில் காகித உருண்டை இருந்தது. அத்துடன் சிறுவன் மூக்கில் ரத்தம் வடிந்திருந்தது. இதனால் அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை, தாய்க்கு இடையே தகராறு இருந்ததால் பிரிந்து வாழ்ந்தது தெரிய வந்தது. தனது தாயுடன் சிறுவன் வசித்து வந்துள்ளார். இதனால் அவரது தந்தை குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில், தாய் வீட்டில் இருந்த சிறுவன் காணாமல் போய் உள்ளார்.

இதனால் அவனது தாய் தேடியுள்ளார். அப்போது சிறுவனின் வாயில் பேப்பரை உருண்டையாக திணித்து அவரது தந்தை கொலை செய்தது தெரிய வந்தது. குடிபோதையில் இருந்த அவரது தந்தை, சிறுவனின் உடலை காசர் பகுதியில் போட்டு விட்டு தலைமறைவானதாக தெரிய வந்தது.

இதையடுத்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில், அவரது கணவரை நேற்று நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர். 59 வயதான அவர் மீது 302 சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையின் தனது மகனின் வாயில் பேப்பர் உருண்டையை அடைத்து அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் தானே மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in