கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு: வழக்கு 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்
ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

டெல்லியில் கலால் கொள்கை தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு 21 நாள்கள் ஜாமீன் வழங்கி, கடந்த மே 10ம் தேதி உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

இந்நிலையில் தேர்தல், பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி அன்று அர்விந்த் கேஜ்ரிவால் திகார் சிறையில் மீண்டும் சரணடைந்தார். முன்னதாக அவர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. இச்சூழலில் அர்விந்த் கேஜ்ரிவாலின் கலால் கொள்கை முறைகேடு தொடர்புடைய வழக்கு நடைபெற்று வரும் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில் வழக்கமான ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்
டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத் துறை தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேஜ்ரிவால் ஜாமீன் வழக்கை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in