நுங்கு வண்டி மூலம் பனை குறித்த விழிப்புணர்வு... குழந்தைகளை குதூகலப்படுத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்!

நுங்கு வண்டி மூலம் பனை குறித்த விழிப்புணர்வு... குழந்தைகளை குதூகலப்படுத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்!
HR Ferncrystal

கோடை விடுமுறையில் நுங்குவண்டி தயாரித்து வழங்கி குழந்தைகளுக்கு பனை மரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் அசோக்குமார்.

மதுரை ஷெனாய் நகர் பகுதியைச்சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் அசோக்குமார். இவர் விதைப்பந்துகள் தயாரிப்பது, மரக்கன்றுகளை நடுதல், பனை விதையை பயன்படுத்தி பொம்மைகள் உருவாக்குவது உள்ளிட்ட இயற்கையைப் போற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்துவருகிறார். வருங்கால சந்ததியினருக்கு பனைமரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 80ஸ் கிட்ஸ் குழந்தைகளின் பிரபல விளையாட்டான நுங்கு வண்டிகளை உருவாக்கித் தந்து அந்த விளையாட்டு மூலம் பனை விதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

நுங்கு வண்டி செய்வதற்கான பயிற்சி
நுங்கு வண்டி செய்வதற்கான பயிற்சி

இன்று மதுரையில், நுங்கு ஓடுகளை கொண்டு குழந்தைகள் விளையாடும் வகையில் நுங்குவண்டி செய்ய பயிற்சி அளித்தார் அசோக்குமார். இதனை ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட குழந்தைகள், தாங்களே உருவாக்கிய நுங்கு வண்டிகளை ஓட்டி மகிழ்ச்சியடைந்தனர். அப்போது, குழந்தைகளிடம், பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மருத்துவ குணம் படைத்த பதநீர், நுங்கு, பனைவெள்ளம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் உள்ளிட்டவை குறித்தும் இயற்கை பேரழிவுகளை பனை மரம் எவ்வாறு தடுக்கின்றன என்பது குறித்தும் குழந்தைகளிடம் அசோக்குமார் எடுத்துரைத்தார்.

நுங்கு வண்டி ஓட்டும் மாணவிகள்
நுங்கு வண்டி ஓட்டும் மாணவிகள்

எப்போதும் ஸ்மார்ட்போனில் மூழ்கி நேரத்தை வீணடிக்கும் குழந்தைகளுக்கு இயற்கை சார்ந்து நுங்கு வண்டி செய்ய கற்றுக் கொடுத்து, அதன் மூலம் பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அசோக்குமாரை நாமும் பாராட்டுவோம்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in