டீக்கடையில் அமர்ந்து பணம் எண்ணிய கோயில் நிர்வாகி... ரூ.56 ஆயிரத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை!

கோயில் நிர்வாகியிடம் இருந்து பணம் பறிமுதல்
கோயில் நிர்வாகியிடம் இருந்து பணம் பறிமுதல்

சிவகங்கை அருகே டீக்கடையில் அமர்ந்து கோயில் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தவரிடம் இருந்து 56 ஆயிரத்து 50 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19ம் தேதி நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறு வியாபாரிகள், சாதாரண பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பணத்தை, தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே செவ்வூர் கிராமத்தில் டீக்கடையில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ராமன் என்பவரிடம் ரூ.56,950-யை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் நடந்துள்ளது. இது கீரணிப்பட்டி மாரியம்மன் கோயில் பணம் என்றும், சமீபத்தில் முடிந்த கோயில் திருவிழாவின் வரவு செலவு கணக்குகளை டீக்கடையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக, மக்களிடம் பணம் வசூல் செய்த நோட்டையும் கொடுத்துள்ளார். எனினும், வாக்காளர்களுக்கு கொடுக்க அவர் பணம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...    
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in