மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு... ஜூன் 1ம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு!

7ம் கட்ட வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
7ம் கட்ட வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Updated on
2 min read

7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் 101.5 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத்தில் 87.5 தொகுதிகளுக்கும், 3ம் கட்டத்தில் 94 தொகுதிகளுக்கும், 4வது கட்டத்தில் 96 தொகுதிகளுக்கும், 5வது கட்டத்தில் 49 தொகுதிகளுக்கும், 6வது கட்டத்தில் 58 தொகுதிகளுக்கும், 7வது கட்டத்தில் 57 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தேர்தல் வாக்குப்பதிவு
தேர்தல் வாக்குப்பதிவு

இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், ஆந்திர மாநிலத்தில் கடந்த மே 13ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல்கள் நிறைவடைந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 1ம் தேதியுடன் அங்கும் அனைத்து தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இதையொட்டி இன்று மாலை 5 மணியுடன் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. ஜூன் 1ம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப் படுத்தி உள்ளது.

7வது கட்டத்தில் பீகாரில் 8, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாபில் 13, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 1 ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்

தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in