பிரேக் பிடிக்காமல் ஸ்வீட் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து; கவனக்குறைவாக செயல்பட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்!

அரசுப்பேருந்து ஸ்வீட் கடைக்குள் புகுந்து விபத்து
அரசுப்பேருந்து ஸ்வீட் கடைக்குள் புகுந்து விபத்து

திண்டுக்கலில் கடைக்குள் அரசுப் பேருந்து புகுந்து விபத்துள்ளான நிலையில், அந்தப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் வெளி மாவட்டங்கள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று கிளம்பியது. பேருந்தை சுப்பிரமணி என்ற ஓட்டுநர் இயக்கினார். பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது பிரேக் பிடிக்காத காரணத்தால் எதிரில் இருந்த ஸ்வீட் கடைக்குள் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் கடையில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்தார். மேலும் கடையில் இருந்த கண்ணாடிப் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் சேதமடைந்தன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேக் பிடிக்காததால் அரசுப்பேருந்து கடைக்குள் புகுந்து விபத்து
பிரேக் பிடிக்காததால் அரசுப்பேருந்து கடைக்குள் புகுந்து விபத்து

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பேருந்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கவனக்குறைவாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கூறுகையில், "ஓட்டுநர் விதிமுறைகளை பின்பற்றாமல் வேகமாக இயக்கி, இடது புறம் திரும்புவதற்கு பதிலாக நேராக பஸ்சை இயக்கி ஸ்வீட் கடைக்குள் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே, கவனக்குறைவால் பேருந்து விபத்து நடந்துள்ளது. இதற்கு முந்தைய நாட்களில் பராமரிப்பு குறைபாடு ஏதுமின்றி முழுமையாக பேருந்து இயக்கப்பட்டுள்ளது. பேருந்தில் எந்தவித இயந்திர கோளாறும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in