நாய் உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கும்பல்... வைரலாகும் சிசிடிவி வீடியோ!

நாய் உரிமையாளரை தாக்கும் கும்பல்
நாய் உரிமையாளரை தாக்கும் கும்பல்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வளர்ப்பு நாய் எதிர் வீட்டுக்கு அடிக்கடி நுழைவதால் ஏற்பட்ட தகராறில், நாயின் உரிமையாளரும், நாயும் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் தெருநாய், வளர்ப்பு நாய்கள் துரத்தி கடிப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, 2 வளர்ப்பு நாய்கள் கடித்த நிலையில், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து நாயின் உரிமையாளர், மனைவி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல நாய் தொடர்பான பிரச்சினை ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வளர்ப்பு நாய் உரிமையாளரை, நடுவீதியில் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய் உரிமையாளரை தாக்குவதை தடுத்த பெண்கள்
நாய் உரிமையாளரை தாக்குவதை தடுத்த பெண்கள்

ஹைதராபாத் அருகே மதுரா நகரில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வெளிநாட்டு ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய், அடிக்கடி எதிர் வீட்டுக்கு நுழைவதும், சிறுநீர், மலம் கழித்து அசிங்கம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதுதொடர்பாக எதிர்வீட்டில் குடியிருக்கும் தனஞ்ஜெய், நாயை வீட்டில் கட்டி வைக்கும்படி ஸ்ரீநாத்திடம் கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து நாய் எதிர்வீட்டுக்கு வந்துள்ளது. இதனால், ஆத்திரமுற்ற தனஞ்ஜெய், தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து ஸ்ரீநாத்திடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும், அங்கே கிடந்த மரக்கட்டைகளை எடுத்து ஸ்ரீநாத்தை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இதனால் நிலைகுலைந்து போன ஸ்ரீநாத், சாலையில் சரிந்து விழுந்தார். இருந்தும் ஆத்திரம் தீரும் வரை அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும், அவரது வளர்ப்பு நாயையும் அடித்து விட்டுச் சென்றனர். இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த ஸ்ரீநாத் மற்றும் நாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து மதுராநநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in