அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கட்சி பதவி பறிப்பு... மக்களவைத் தேர்தல் அதிரடி ஆரம்பம்!

அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தானை நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுகவின் இரண்டு மாவட்டச் செயலாளர்களை புதிதாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி அமைச்சர் செஞ்சி மஸ்தானை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டாக்டர் ப. சேகர், (28, ஜெயபுரம் 2வது தெரு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் - 604 001) அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், “விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி அவர்கள் மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ். (ஆர்த்தோ) அவர்கள் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்தபின்பு மாவட்டச் செயலாளர்களை மாற்றியமைக்கும் பணி விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in