திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவரானார் கனிமொழி - முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

கனிமொழி ஸ்டாலின்
கனிமொழி ஸ்டாலின்

திமுகவின் நாடாளுமன்ற குழு நிர்வாகிகளை நியமித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை பொதுச் செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மக்களவை குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலுவும், மக்களவை குழு துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநிலங்களவை குழுத்தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவும், மாநிலங்களவை குழுத் தலைவராக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகமும், மாநிலங்களவை கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சனும், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைபரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

இதற்கு முன்னதாக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர். பாலு இருந்த நிலையில், தற்போது அந்த பதவியில் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் தற்போது திமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in