விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்... திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராக பதவி வகித்து வந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து வருகிற ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி

ஜூன் 14ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளது. இந்நிலையில் இங்கு மீண்டும் திமுக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு குறித்து கலந்து ஆலோசித்தனர்.

திமுக தலைமை அலுவலகம்
திமுக தலைமை அலுவலகம்

இதைத் தொடர்ந்து தற்போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் திமுக விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளராக தற்போது பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in