‘கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை மணி’ தேர்தல் முடிவு குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஒப்புதல்

கர்நாடகா துணை முதலவர் டி.கே.சிவகுமார்
கர்நாடகா துணை முதலவர் டி.கே.சிவகுமார்

’மக்களவை தேர்தல் முடிவுகள் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்திருப்பதாக’ துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜக 17 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களையும் பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்த கர்நாடக காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்த வெற்றியை பறிகொடுத்தது.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

சட்டபேரவைத் தேர்தலில் வெற்றிக்கு உதவிய காங்கிரஸ் கட்சியின் அதே வாக்குறுதிகள், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கும் கைகொடுக்கும் என எதிர்பார்த்து காங்கிரஸ் ஏமாந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை ஆராய்ந்து திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.

கட்சியின் செயல்பாடு குறித்து விவாதிப்பதையோ அல்லது ஊடகங்கள் முன் பழி சுமத்துவதையோ தவிர்க்குமாறு கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 15 தொகுதிகளிலேனும் வெற்றி சாத்தியம் என காங்கிரஸ் நம்பியிருந்தது. ஆனால் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

ஏற்கனவே முதல்வர் பதவி முதல் அமைச்சரவை இலாக்கா ஒதுக்கீடு வரை உட்கட்சி மோதல்களில் சிக்கித் தவித்துவரும் கர்நாடக காங்கிரஸில், தற்போதைய மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அந்த மோதல் மேலும் வலுத்துள்ளது. இதனால் லோக்கல் தலைவர்கள் பரஸ்பரம் பழிபோட்டு ஊடகங்களில் பேட்டியளிக்க, பல உட்கட்சி விவகாரங்கள் அம்பலமேறி வருகின்றன.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

சுதாரித்துக்கொண்ட டி.கே.சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஊடகங்களிடம் தன்னிச்சையாக பேட்டியளிக்க தடை விதித்துள்ளார். உடனடியாக தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொண்டு தோல்விக்கான காரணங்களை கண்டறியவும் உத்தரவிட்டிருக்கிறார். “மக்களவைத் தேர்தல் முடிவுகள் எங்களுக்கான எச்சரிக்கை மணி. விரைவில் எங்களை சரி செய்துகொள்ள இந்த தேர்தல் சரிவு உதவும்” என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்தரப்பில் என்டிஏ கூட்டணி உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு வாய்ப்பில்லாத போதும் கூட்டணிகள் உதவியோடு மத்தியில் ஆட்சியமைத்திருக்கும் பாஜகவுக்கு, காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் கர்நாடகத்திலிருந்து கணிசமான எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பியதில் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைவிட மோசமான உட்கட்சி மோதல்களில் சிக்கித்தவித்த கர்நாடக பாஜக தற்போது மீண்டெழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in