கோவை, தென்சென்னை, நீலகிரியில் பலப்பரீட்சை... திமுக - அதிமுக - பாஜக மும்முனை போட்டி!

ஸ்டாலின் இபிஎஸ் மோடி
ஸ்டாலின் இபிஎஸ் மோடி

திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இதுவரை வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், கோவை, தென்சென்னை, நீலகிரியில் 3 கட்சிகளின் வேட்பாளர்களும் நேரடியாக மோதுகின்றனர். அதனால், இந்த தொகுதிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக, அதிமுக வெளியிட்டது. அதில், நேரடியாக திமுக 21, அதிமுக 33 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதில், இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன. வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேருக்குநேராக மோதுகின்றன.

அண்ணாமலை - தமிழிசை-பொன்.ராதாகிருஷ்ணன்
அண்ணாமலை - தமிழிசை-பொன்.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியாகியுள்ளது. இதில், கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோஜ்.பி.செல்வமும், கிருஷ்ணகிரியில் நரசிம்மன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் கோவை, தென்சென்னை, நீலகிரி என 3 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாக களத்தில் மோதுகின்றன. அதில், கோவையில் கணபதி ராஜ்குமார் (திமுக), சிங்கை G ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தென்சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல, நீலகிரி (தனி) தொகுதியில் ஆ.ராசா (திமுக), லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக), எல்.முருகன் (பாஜக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக உடன் பாஜக போட்டியிடுவது மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மூன்றில் கோவை தொகுதி மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. ஏனென்றால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். கோவை மக்களவைத் தொகுதியில் 1998, 1999 தேர்தல்களில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது. இருமுறையும் சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பி ஆக தேர்வாகியுள்ளார். அதன் பிறகு நடந்த 2004, 2009, 2014, 2019 என 4 மக்களவைத் தேர்தல்களிலும் தலா ஒருமுறை சிபிஐ, அதிமுக, இருமுறை சிபிஎம் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த முறை அண்ணாமலை வென்று வெற்றிக்கணக்கை மீண்டும் தொடங்கி வைப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எல்.முருகன் - ஆ.ராசா
எல்.முருகன் - ஆ.ராசா

அதேபோன்று நீலகிரி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த 16 தேர்தல்களில் அதிகமுறை திமுக - காங்கிரஸ் கூட்டணியே வெற்றிப் பெற்றுள்ளது. அந்த தொகுதியில் 1998, 1999 தேர்தல்களில் மட்டுமே வெற்றிப் பெற்ற பாஜக, திமுக கூட்டணியின் கோட்டையாக விளங்கும் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை எதிர்த்து வெல்வாரா, வீழ்வாரா என்று தேர்தல்தான் பதில் சொல்லும்.

அதேபோன்று தென்சென்னை தொகுதியில் இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ், அதிமுக கட்சிகளே வெற்றிப் பெற்றுள்ளன. இதுவரையில் ஒரு தேர்தலில் கூட பாஜக வெற்றிப் பெற்றதில்லை. அதனால், இம்முறை பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், வரலாற்றை மாற்றுவாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தென்சென்னை, கோவை, நீலகிரி தொகுதிகளும் அரசியல் களத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : ராம்தேவ்க்கு சம்மன்... நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!

பாமகவுக்கு குடும்பமும், பணமுமே பிரதானம்... பொளந்து கட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

பாஜக பிரமுகர் கழுத்தை நெரித்துக் கொலை: தகாத உறவைக் கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்!

பாஜக கொடியுடன் வந்த சொகுசு கார்... தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in