இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி!

இந்தோனேசியாவில் வெள்ளம்
இந்தோனேசியாவில் வெள்ளம்

இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சனிக்கிழமை பெய்த அதிகபட்ச மழையால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பொதுமக்கள் பலர் தங்களின் உயிரையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா

முக்கியமாக, கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்தனர். ஆங்காங்கே சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களையும், காணாமல் போனவர்களையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவு

வெள்ளப் பெருக்கில் தானா டட்டார் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சேற்றால் சூழப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சுற்றியுள்ள ஐந்து வட்டாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

84 குடியிருப்புகளும் 16 பாலங்களும் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும் மக்களைத் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் மீட்புக் குழுவினரும் அதிகாரிகளும் ரப்பர் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in