சைக்கிள் கடையிலிருந்து கேபினட் அமைச்சர்: வீரேந்திர குமாரின் அரசியல் வெற்றிப் பயணம்!

அமைச்சர் பதவி ஏற்கும் வீரேந்திர குமார்
அமைச்சர் பதவி ஏற்கும் வீரேந்திர குமார்

சிறு வயதில் தந்தையின் சைக்கிள் கடையில் உதவி புரிந்த, திகாம்கர் தொகுதி எம்.பி- வீரேந்திர குமார் காடிக், தற்போது பிரதமர் மோடி அரசில் கேபினட் அமைச்சராக அரசியல் வாழ்வில் உயர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளவர் வீரேந்திர குமார் காடிக். மத்திய பிரதேச மாநிலம், சாகரைச் சேர்ந்த இவர் சிறு வயதில் தனது தந்தையின் சைக்கிள் கடையில் பழுது பார்ப்பது, பஞ்சர் ஒட்டுவது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார்.

மத்திய அமைச்சர் வீரேந்திர குமார்
மத்திய அமைச்சர் வீரேந்திர குமார்

பின்னர் திறமைகளை வளர்த்து கடையையும் நடத்தினார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இவர், பட்டப்படிப்பை முடித்து, குழந்தை தொழிலாளர் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

வீரேந்திர குமார் காடிக், கடந்த 1996ல் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு நான்கு முறை சாகர் எம்பி-யாக இருந்தார். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட திகாம்கர் தொகுதியில் இருந்து தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

பிரதமர் மோடியின் முதலாவது பதவிக்காலத்தில் ஜூனியர் அமைச்சராகப் பணியாற்றிய 74 வயதான வீரேந்திர குமார் காடிக், தற்போது பிரதமர் மோடியின் 3வது பதவிக்காலத்தில் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்த முறை அவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

பஞ்சர் ஒட்டும் சிறுவர்களுடன் வீரேந்திர குமார்
பஞ்சர் ஒட்டும் சிறுவர்களுடன் வீரேந்திர குமார்

இன்று காலை புதிய பொறுப்பை ஏற்ற பின்னர், வீரேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இன்னும் சாதாரண வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் இப்போது அமைச்சராக இருக்கிறேன். ஆனால் என் துணிகளை நானே துவைக்கிறேன். அமைச்சர் பதவி ஒரு குறுகிய காலம்.

இந்த நேரத்தில், சாதாரண மனிதருடன் நாம் தொடர்பு கொள்ள முடிந்தால், சமூகம் நம் மீது நம்பிக்கை வைக்கிறது. சமுதாயம் நம்முடன் நிற்கும். 8 முறை தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

வீரேந்திர குமார் காடிக், இந்த தேர்தலில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அவரது முந்தைய 7 வெற்றிகளின் வித்தியாசத்தை விட கூடுதலாகும்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in