காங்கிரஸ் எம்.பி-க்களின் எண்ணிக்கை 100 ஆனது - மகாராஷ்டிராவின் சுயேட்சை எம்.பி கட்சியில் இணைந்தார்!

ராகுல் சோனியாவுடன் விஷால் பாட்டீல்
ராகுல் சோனியாவுடன் விஷால் பாட்டீல்

மகாராஷ்டிர மாநிலம் சங்லி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டீல் காங்கிரஸில் இணைந்துள்ளார். விஷால் பாட்டீல் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் அக்கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் சங்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டீல், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்தியா கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

விஷால் பாட்டீல் இன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்தார். அப்போது விஷால் பாட்டீல் தனது ஆதரவு கடிதத்தை கார்கேவிடம் கொடுத்தார். இந்த சந்திப்பின்போது மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜீத் கதம் உடன் இருந்தார்.

இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜீத் கதம், “ விஷால் பாட்டீலின் ஆதரவுடன், மக்களவையில் காங்கிரஸின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது" என்று கூறினார்.

கார்கேவை சந்தித்த விஷால் பாட்டீல்
கார்கேவை சந்தித்த விஷால் பாட்டீல்

இதனைத் தொடர்ந்துப் பேசிய விஷால் பாட்டீல், “எனது குடும்பம் பல ஆண்டுகளாக காங்கிரஸில் அங்கம் வகிக்கிறது. எனது தந்தை, தாத்தா, சகோதரர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். எங்கள் கட்சித் தலைவர்கள் உத்தவ் தாக்கரேவிடம், சங்லி தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சி செய்தனர். இருப்பினும், அது நடக்கவில்லை. எனது குடும்பத்திற்கும் தாக்கரே குடும்பத்திற்கும் நல்ல உறவு உள்ளது. இப்போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், எங்களுக்கிடையிலான அனைத்து தவறான புரிதல்களும் முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன்”என்று அவர் கூறினார்.

விஷால் பாட்டீல்
விஷால் பாட்டீல்

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் பேரனான விஷால் பாட்டீல், சங்லி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காததால், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் பாஜக மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகளின்படி விஷால் பாட்டீல் 571666 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் சஞ்சய் பாட்டீல் 471613 வாக்குகள் பெற்று 100053 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் சிவசேனா( உத்தவ் பிரிவு) வேட்பாளர் சந்திரஹர் சுபாஷ் பாட்டீல் 60860 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in