காத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை... மறுக்கும் ராகுல் காந்தி; வலியுறுத்தும் காங்கிரஸார்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களவையின் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் ராகுல் கந்தி அமர வேண்டும் என்பது கட்சி நிர்வாகிகளில் விருப்பமாக நீடிக்க, அதற்கு உடன்படாது மறுப்பு தெரிவித்து வருகிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியை தலைவராகக் கொண்டு கடந்த முறை மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ் கட்சி. ஆனால் பாஜகவின் பிரம்மாண்ட வெற்றிக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய ராகுல் காந்தி, போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றான அமேதியில் தோல்வியடைந்தார். கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் பதவியிலிருந்தும் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்போது வரை அந்த பொறுப்பை அவர் ஏற்கவில்லை.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

மேலும் எண்ணிக்கையில் குறைந்த எம்பிக்களுடன் காங்கிரஸ் கட்சியின் தோல்வி முகம் காரணமாக, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது. தற்போதைய தேர்தலில் இந்த காட்சிகள் ஏகமாய் மாற்றம் கண்டிருக்கின்றன. ஆளும் கட்சியான பாஜக தனிப்பட்ட பெரும்பான்மை கிட்டாததில் கூட்டணி கட்சிகள் உதவியோடு ஆட்சி அமைக்க இருக்கிறது. 5 ஆண்டுகள் நெடுக கூட்டணி கட்சிகளின் குடைச்சலுடனே அவர்கள் ஆட்சியை முன்னெடுத்தாக வேண்டும்.

அத்துடன் இன்னொரு குடைச்சலாக எதிர்க்கட்சி வரிசையில் போதிய பலத்துடன் காங்கிரஸ் வீற்றிருக்கப் போகிறது. இந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையும் காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்கிறது. இந்த மதிப்புமிக்க இருக்கையில் யார் அமர்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடப்பு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமான ராகுல் காந்தி அந்த நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என்பது, காங்கிரஸ் நிர்வாகிகளின் விருப்பமாக நீடிக்கிறது. கடந்த மக்களவையின் எம்பியாக இருந்தபடி ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் பிரதமர் மோடியையும், பாஜகவையும் திக்குமுக்காடச் செய்தது வரலாறு.

இந்த வகையில் இம்முறை எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து, ஆளும்கட்சிக்கு எதிராக இன்னும் பலத்துடன் ராகுல் காந்தி இயங்க வேண்டும் என்பது காங்கிரஸார் விருப்பமாக உள்ளது. மக்களவை அதிரடிகள் மட்டுமன்றி, நீதித்துறை முதல் மத்திய விசாரணை அமைப்புகள் வரை முக்கிய உயர்பதவிகள் நியமனத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரின் பங்கும் அவசியமாகும். இந்த வகையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்று ஆளும்கட்சியின் முடிவுகளுக்கு சிம்மசொப்பனமாக மாற வேண்டும் என்பதும் காங்கிரஸார் விருப்பமாக உள்ளது.

தனது நடைபயணத்தின்போது ராகுல் காந்தி
தனது நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

ஆனால் இதற்கு ராகுல் காந்தி இன்னமும் பிடிகொடுக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் மக்கள் தந்திருக்கும் ஆதரவை முறையாக பயன்படுத்தி, களத்தில் இறங்கி வேலை செய்யவும், எதிர்வரும் பல மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு ஆயத்தப்படுத்தவும், அடுத்த சுற்று ஜோடோ யாத்திரை செல்லவுமே ராகுல் காந்தி விரும்புகிறார். மேலும் கட்சியின் சீனியர்களில் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமரவைத்து பின்னிருந்து இயக்கவும், இயங்கவுமே அவர் விரும்புகிறார். அடுத்த சில தினங்களில் ராகுலின் சித்தம் எதுவென்று தெரிந்துவிடும்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in