அக்னிபத் திட்டத்தை மறு ஆய்வு செய்யுங்கள்: ஆட்சியமைக்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த ஐக்கிய ஜனதா தளம்

அக்னிபத் திட்டம்
அக்னிபத் திட்டம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் முன்பாகவே, அதன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி, அக்னிபத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக் காலத்தில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்னிபத் திட்டம், ராணுவத்தின் மூன்று பிரிவுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படும் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்குப் பின் 25 சதவீத வீரர்கள் ராணுவத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரிய விரும்பும் இளைஞர்கள் அதில் தொடர்வதை இத்திட்டம் கேள்விக்குறியாக்கும் எனவும், இத்திட்டம் ராணுவத்தில் இணைபவர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என கூறி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

இப்போது மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இச்சூழலில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஜேடியுவின் தலைமை செய்தித் தொடர்பாளரும், அக்கட்சித் தலைவர் நிதிஷ்குமாரின் நெருங்கிய உதவியாளருமான கே.சி.தியாகி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கே.சி.தியாகி
கே.சி.தியாகி

இது தொடர்பாக அவர் கூறுகையில், "பல மாநிலங்களில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அதிருப்தி இருக்கிறது. எனவே, நாங்கள் அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோருவோம். நாங்கள் அதை எதிர்க்கவில்லை" என்றார்.

நரேந்திர மோடியின் முதல் இரண்டு பதவிக்காலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தியதால், பாஜக நினைக்கும் எந்த சட்டத்தையும் நிறைவேற்றி வந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்

இந்நிலையில் தற்போது கூட்டணி ஆட்சியில் தன்னிச்சையாக எதையும் செயல்படுத்த முடியாது என்ற சூழலின் முதல் அறிகுறியாக, ஜேடியு முன்னணி தலைவர் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை மறுஆய்வு செய்யக் கோரிக்கை விடுத்துள்ள நிகழ்வு பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in