விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த புகழேந்தி. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஜூன் 10ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ம் தேதி துவங்குகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் தனித்து போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் திமுக மற்றும் பிற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி

இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று திமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன்,அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுகவில் மறைந்த புகழேந்தியின் மகன் புகழ் செல்வகுமார், அமைச்சர் பொன்முடியின் மகனும் முன்னாள் எம்பி-யுமான கவுதம சிகாமணி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in