பீகார் சிறையில் சீனா கைதி தற்கொலை: சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்ததால் கைதானவர்

சிறை கைதி தற்கொலை
சிறை கைதி தற்கொலை

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததால் கைது செய்யப்பட்டு பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீன கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த லீ ஜியாகி என்னும் இவர், எந்த பயண ஆவணங்களுமின்றி, பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் சுற்றித்திரிந்தார். கடந்த 6ம் தேதி பிரம்மபுரா காவல் நிலையப் பகுதியில் உள்ள லட்சுமி சவுக் அருகே லீ ஜியாகியை போலீஸார் கைது செய்தனர்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மத்திய சிறை
பீகார் மாநிலம் முசாபர்பூர் மத்திய சிறை

அவரிடமிருந்து சீனாவின் வரைபடம், மொபைல் போன், சீனா, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளின் கரன்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த லீ ஜியாகி மீது, வெளிநாட்டினர் சட்டம், 1946-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர், அமர் ஷஹீத் குதிராம் போஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் லீ ஜியாகி சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை சிறை நிர்வாகத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி லீ ஜியாகி இன்று உயிரிழந்தார்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

லீ ஜியாகிக்கு சிகிச்சை அளித்த எஸ்கேஎம்சிஎச் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 7ம் தேதி அன்று, சிறைச்சாலையின் மருத்துவமனை கழிப்பறையில், உடைந்த கண் கண்ணாடிகளால் தனது முக்கியமான உடல் பாகங்களை வெட்ட முயன்றதால், அவர் (லீ ஜியாகி) காயமடைந்து மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

சிறை அதிகாரிகளால் உடனடியாக முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (எஸ்கேஎம்சிஎச்) சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்துவிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in