கொலையை தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் - காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

உயிரிழந்த தினேஷ்
உயிரிழந்த தினேஷ்

சென்னையில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவருக்கும், மற்றொரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக, முன்கூட்டியே கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் யுவராஜ் என்பவருக்கு போலீஸ் தலைமையகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கொருக்குப்பேட்டை காவல் நிலையம்
கொருக்குப்பேட்டை காவல் நிலையம்

இந்த நிலையில் கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் நேற்று தினேஷை மற்றொரு கும்பல் குத்திக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெருமாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப
சென்னை பெருமாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப

இதனிடையே சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஆய்வாளர் யுவராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in