கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆய்வு செய்யலாம்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோடநாடு எஸ்டேட்
கோடநாடு எஸ்டேட்

கோடநாடு எஸ்டேட்டில் புதிதாக கட்டுமானங்கள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவருக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ளது. கோடை காலங்களின் போது ஓய்வுக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இங்கு வருகை தருவது வழக்கம். இந்த எஸ்டேட்டுக்குள் சொகுசு பங்களா ஒன்றும், ஏராளமான ஏக்கர் தேயிலை எஸ்டேட்டுகளும், தொழிலாளர்கள் தங்குவதற்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

கோடநாடு பங்களா
கோடநாடு பங்களா

இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு இங்கு சொத்து வரி விதிப்பதற்காக நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என கோத்தகிரி ஊராட்சி மன்றத் தலைவர் சார்பில், எஸ்டேட் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், சொத்து வரி முறையாக கட்டப்பட்டு வருவதால் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்று நீதிமன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்ய தடைவிதித்து.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு புதிய வரி விதிப்பிற்காக கோடநாடு எஸ்டேட்டிற்குள் நேரில் சென்று ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென ஊராட்சி மன்றத் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நேரில் சென்று ஆய்வு செய்தால் தான் புதிய கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கிறதா, எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒரு முடிவுக்கு வர முடியும் என வாதிட்டார்.

சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த ஆய்வுக்கு அனுமதிக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஊராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் ஆய்வின் போது நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அங்குள்ள பணியாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in