ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

ராம நவமியால் முக்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தேதியில் மாற்றம்!

ராம நவமியை முன்னிட்டு வரும் 17ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற விருந்த KKR vs RR போட்டி ஏப்ரல் 16ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் அட்டவணை
ஐபிஎல் அட்டவணை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 10 அணிகள் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் அட்டவணை படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் ராம நவமி கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடைப்பெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் நேர மாற்றம்
கிரிக்கெட் போட்டிகள் நேர மாற்றம்

ராம நவமி திருவிழா காரணமாக கிரிக்கெட் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தினர், கொல்கத்தா போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 17ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற விருந்த KKR vs RR போட்டி ஏப்ரல் 16ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்.16ம் தேதியன்று நடைபெற இருந்த GT vs DC போட்டி ஏப் 17ம் தேதி நடைபெரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in