திருவண்ணாமலை அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு சாலையில் கார் மெக்கானிக் வொர்க்ஷாப் வைத்திருப்பவர் வெற்றிவேல். இவரிடம் கோலாபாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர தனக்கு சொந்தமான டாடா இண்டிகா காரை பழுது நீக்குவதற்காக கொடுத்திருந்தார். காரை பழுது நீக்கிய பின்னர், பெயிண்ட் அடிப்பதற்காக வெற்றிவேல் அந்த காரை நல்லவன்பாளையம் புறவழிச்சாலையில் இன்று ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட வெற்றிவேல் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். புகை வரும் இடத்தை கண்டறிய அவர் முயன்று கொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல், உடனடியாக காரை விட்டு விலகிச் சென்று, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் திடீரென கார் ஒன்று பற்றி எரிந்த சம்பவத்தால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதால் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்
சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!
5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!