விருதுநகரில் நான் போட்டியிட வேண்டுமென மதிமுகவினர் விரும்புகின்றனர் - துரை வைகோ பேச்சு!

துரை வைகோ
துரை வைகோ

வரும் மக்களவைத் தேர்தலில் வெறும் வாக்கு இயந்திரத்தை நம்பியே 370-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிப் பெறும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக போட்டியிட உள்ளது. எத்தனை தொகுதி, எந்த தொகுதி என்று பேச்சுவார்த்தையில் உள்ளது. அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லையில் நடந்த தேர்தல் நிதி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகளே வெளியேறியுள்ளன. வலுவான நிலையிலேயே கூட்டணி உள்ளது. தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவுக்கு வரும். இந்தியா கூட்டணி வேட்பாளர்கள், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றிப் பெறுவார்கள்.

பம்பரம் சின்னம்
பம்பரம் சின்னம்

பம்பரம் சின்னத்தை மதிமுக இழந்துவிட்டது. குறுகிய காலத்தில் வேறு சின்னத்தில் போட்டியிட்டு, மக்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்றுச் சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டோம். தற்போது தனிச்சின்னத்தில் போட்டியிடுவதே எங்களது விருப்பம். இதுகுறித்து கூட்டணியும், கட்சித் தலைமையும் முடிவு செய்யும்.

துரை வைகோ, வைகோ
துரை வைகோ, வைகோ

விருதுநகர், திருச்சி, ஈரோடு என 3 மக்களவைத் தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட வேண்டும் என்று மதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். முக்கியமாக விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவைப் பொருத்து வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...

அமித் ஷா மீதான ‘கொலைகாரர்’ அவதூறு... ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

எடப்பாடி பழனிசாமி காரை வழிமறித்து கதவைத் திறக்க முயற்சி... வாலிபரால் பெரும் பரபரப்பு!

10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட்... சபாநாயகர் அதிரடி!

இனி, ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்... 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!

சிரித்த முகத்துக்கு மாற விரும்பிய மாப்பிள்ளை... உயிரைப் பறித்தது ஹைதராபாத் அறுவை சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in