கர்நாடகாவில் அதிர்ச்சி... கண்டனப் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் மரணம்!

சிமோகாவில் பாஜக தலைவருக்கு மாரடைப்பு
சிமோகாவில் பாஜக தலைவருக்கு மாரடைப்பு
Updated on
1 min read

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிமோகாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் எம்.பி. பானுபிரகாஷ் (69) மாரடைப்பால் உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அவற்றின் விலை லிட்டருக்கு தலா ரூ.3 அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஜக சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது.

சிமோகாவில் உள்ள சீனப்பா செட்டி வட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில், எம்.பி.பானு பிரகாஷ் பங்கேற்றார். இதில் மாநில அரசை கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், போராட்டத்துக்குப் பின்னற் ராம் பஜனை நடத்தினார். பின்னர், காரில் ஏறியபோது பானுபிரகாஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார்.

எம்.பி.பானு பிரகாஷ்
எம்.பி.பானு பிரகாஷ்

மறைந்த பானு பிரகாஷ் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தீவிர தொண்டராக இருந்தார். 1999ம் ஆண்டில் கஜனூர் மாவட்ட பஞ்சாயத்து தொகுதியில் இருந்து அரசியலில் நுழைந்தார். அவர் 2013 முதல் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பின்னர் பாஜகவின் மாநில பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in