இனி வாழ்நாளில் விமானநிலையங்களில் பிரஸ்மீட் கிடையாது - அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

"வாழ்நாளில் இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதும் இனி பாஜக தலைவர்கள் பேசமாட்டார்கள்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தனது அதிரடி பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் எப்போதும் பரபரப்பாக இருப்பவர் பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் செய்தியாளர்களிடம், பொதுக்கூட்ட மேடைகளிலும் பேசும் பல கருத்துகள் சர்ச்சையாவது வழக்கம். அதற்கு ஆளுங்கட்சியான திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வினையாற்றும்.

இந்நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை தழுவினார் அண்ணாமலை. அவரது தலைமையிலான தமிழக பாஜகவும், தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவருக்கு மத்திய அமைச்சர் அல்லது இணை அமைச்சர் வழங்கப்படலாம் என்று தகவல் பரவியது. ஆனால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

டெல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள், பல்வேறு கேள்விகளை அடுக்கினர்.

இதற்கு பதில் அளிக்காமல் காரில் ஏறிய அண்ணாமலை, “இனிமேல் வாழ்நாளில் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். பாஜக அலுவலகங்களில் மட்டுமே பேட்டி அளிப்பேன். முறைப்படி 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்புக்கான தகவல் அளிக்கப்படும்.

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி

நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும். பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதும் இனி பாஜக தலைவர்கள் பேசமாட்டார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு இனி முறைப்படுத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in