நெருங்கும் தீர்ப்பு நாள்: ஜே.பி.நட்டா இல்லத்தில் பாஜக உயர்மட்ட தலைவர்கள் தீவிர ஆலோசனை!

பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை
பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நெருங்கியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் அக்கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது 28 கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியா, எந்த கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என ஒட்டுமொத்த நாடும் உற்று நோக்குகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உச்சகட்ட பரபரப்பில் உள்ளன.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடந்த 1ம் தேதி கூடி தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், பாஜக சார்பில் புது டெல்லியில் இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, மனோகர் லால் கட்டார், அஷ்வினி வைஷ்ணவ், தருண் சுக், ஷிவ் பிரகாஷ், மன்சுக் மாண்டவியா மற்றும் பிஎல் சந்தோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள், கருத்துக் கணிப்பை நிராகரித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவுக்கு வர உள்ளதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் உறுதியாக கூறி வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், பாஜக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிட வில்லை. எனினும் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளும் வியூகம் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசித்ததாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in