பாஜகவின் பங்கஜா முண்டே தோற்றால் உயிரை விடுவோம்... சபதம் எடுத்தவர்களில் இதுவரை இருவர் இறந்ததால் அதிர்ச்சி!

தந்தை கோபிநாத் முண்டே உடன் பங்கஜா
தந்தை கோபிநாத் முண்டே உடன் பங்கஜா

மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பங்கஜா முண்டே தோற்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என சபதமிட்டவர்களில் இதுவரை இருவர் உயிரிழந்திருப்பது மகாராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சி தந்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் முடிந்து, மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சர்கள் பதவியேற்பும் நேற்று மாலை முடிவடைந்தது. தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்த கட்சித் தொண்டர்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் தோல்விக்காக, அடுத்தடுத்து இருவர் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பாஜகவினர் மட்டுமன்றி மாநில காவல்துறைக்கும் அதிர்ச்சி தந்துள்ளது.

பங்கஜா முண்டே
பங்கஜா முண்டே

தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறவில்லையெனில் மீசையை மழிப்பேன், மொட்டையடிப்பேன் என்ற சவடால் சவால்கள் தமிழகத்திலும் அரங்கேறி உள்ளன. இதன் உச்சமாக விரலை நறுக்கிக்கொண்டவர்களும் உண்டு. ஆனால் மகாராஷ்டிர மாநிலம் பீட் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பங்கஜா முண்டேவின் அதிர்ச்சி தோல்விக்காக, கட்சிப் பணியாற்றியவர்களில் இதுவரை 2 பேர் இறந்துள்ளனர். முன்னதாக பங்கஜா வெற்றி பெறாவிடில் உயிரை மாய்த்துக் கொள்வேன் என பகிரங்கமாக இவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

பங்கஜா முண்டே மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளாவார். கோபிநாத்தின் ஆதரவாளர்கள் அவரது அரசியல் வாரிசாக மகள் பங்கஜாவை கொண்டாடி வந்தனர். இந்த வகையில் பீட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பங்கஜா 6,77,397 பெற்றிருந்தார். ஆனால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில், 6,83,950 வாக்குகளுடன் சரத்பவாரின் என்சிபி வேட்பாளர் பஜ்ரங் மனோகர் வெற்றி பெற்றிருந்தார். இந்த வகையில் பங்கஜா முண்டே 6,553 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பங்கஜா முண்டேவுக்காக களமிறங்கிய தேர்தல் பணியாற்றிய பாஜக தொண்டர்கள் பலரால், இந்த மிக குறுகிய வாக்கு வித்தியாசத்திலான தோல்வியை தாங்கிக்கொள்ள இயலவில்லை. இதில் லத்தூர் அகமதுபூரில் உள்ள யெஸ்டார் பகுதியைச் சேர்ந்த டிரக் டிரைவராக இருந்த சச்சின் கொண்டிபா முண்டே என்பவர் இரு தினங்கள் முன்னதாக பேருந்து பின்னாக விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

தொண்டர்களுடன் பங்கஜா முண்டே
தொண்டர்களுடன் பங்கஜா முண்டே

முன்னதாக, தேர்தல் பிரச்சார பணிகளின் ஊடாக வீடியோ வெளியிட்டிருந்த சச்சின் கொண்டிபா, பங்கஜா முண்டே தோற்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என சபத அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி அஹ்மத்பூர்-அந்தோரி சாலையில் போர்கான் பட்டி அருகே, வெள்ளி இரவன்று ரிவ்ர்ஸ் எடுத்த ஒரு பேருந்தின் பின்சக்கரத்தில் விழுந்து தனது உயிரை இவர் மாய்த்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பாண்டுரங் சோனாவானே என்ற பாஜக தொண்டரும், பங்கஜா முண்டேவின் குறுகிய வித்தியாசத்திலான தோல்வியை தாங்க முடியாது 3 தினங்களாக புலம்பிக்கொண்டிருந்தாராம். இந்நிலையில் இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

இவற்றையடுத்து மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, இது போன்று பகிரங்கமாக தேர்தல் தற்கொலை அறிவிப்புகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கும் கட்சித் தொண்டர்களை காவல்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in