திருமணத்தை விட இதுதான் முக்கியம்... பிக் பாஸ் பிரபலத்தின் அதிரடி முடிவு!

அபு ரோசிக்
அபு ரோசிக்

3 அடி உயரம் கொண்ட பிரபல பாடகர் அபு ரோசிக் கடந்த மாதம் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் விஷயத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால், இப்போது திடீரென அவர் திருமணத்தைத் தள்ளி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் அபு ரோசிக். சமூலவலைதளங்களில் பிரபல இன்ஃபுளூயன்சராக வலம் வரும் இவர் பாடகரும் கூட. நடிகர் சல்மான் கான் இந்தியில் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனில் இவர் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

20 வயதாகும் இவர் 3 அடிதான் உயரம் கொண்டவர். அந்த தடைகளை எல்லாம் தகர்த்து எப்போதும் சிரித்த முகமாகவும் தன்னம்பிக்கையுடனும் வலம் வரும் இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கும் விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

தஜிகிஸ்தானி பாடகி அமிராவைத்தான் இவர் திருமணம் செய்ய உள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 7-ம் தேதி தனக்குத் திருமணம் ஆக இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார் அபு. இந்த விஷயத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துச் சொல்லி வந்தனர். ஆனால், இப்போது தனக்குத் திருமணம் தள்ளிப் போயிருக்கும் அதிர்ச்சி விஷயத்தைக் கூறியிருக்கிறார் அபு.

அபு ரோசிக்
அபு ரோசிக்

துபாயில் ஜூலை 6 அன்று பாக்ஸிங் ஃபைட் போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அபு. இதுபற்றி நேற்று வெளியான பேட்டியில் அவர் பேசும்போது, “என் வாழ்க்கையில் இந்த வாய்ப்பைப் பெறுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த ஆண்டு எனது தொழில் மற்றும் எனது காதல் வாழ்க்கைக்கு பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளது.

அபு ரோசிக்
அபு ரோசிக்

இந்த போட்டி எங்கள் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நிதி பாதுகாப்பை வழங்கும் என்பதால் திருமணத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. மேலும், நான் கலந்து கொள்வது பலருக்கும் உந்து சக்தியாகவும் இருக்கும். அமிராவும் இதுபற்றி புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்தார். இந்த மேட்ச் முடிந்ததும் புதிய திருமண தேதியை சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in