திருச்சூரில் அதிர்ச்சி: வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசித் தாக்குதல்; கண்ணாடி உடைந்து சேதம்

கல்வீச்சில் சேதமடைந்த ரயில் பெட்டியின் கண்ணாடி
கல்வீச்சில் சேதமடைந்த ரயில் பெட்டியின் கண்ணாடி

திருச்சூரில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில் ரயில் பெட்டிகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருச்சூரில் திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது இன்று காலை 9.30 மணி அளவில் திடீரென கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரயிலின் சி2 மற்றும் சி4 பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்தன. எனினும், இந்த தாக்குதலில் பயணிகளுக்கு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

இந்த தாக்குதலை நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) தெரிவித்துள்ளது. கேரளாவில் இதற்கு முன்பும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று கண்ணூரில் உள்ள தலச்சேரி மற்றும் மாஹி இடையே ரயிலின் சி-8 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட ரயிலானது காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

ரயில் மீது கல் வீசி தாக்குதல்
ரயில் மீது கல் வீசி தாக்குதல்

இதேபோல், கண்ணூரில் பல்வேறு ரயில்கள் மீது கற்கள் வீசிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி இரவு, மூன்று ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன. திருவனந்தபுரம் - மும்பை நேத்ராவதி விரைவு ரயில் கண்ணூர் - வளப்பட்டினம் இடையே சென்று கொண்டிருந்தபோது அதன் ஏசி பெட்டியில் கற்கள் வீசித் தாக்கப்பட்டது. கேரளாவில் அடுத்தடுத்து ரயில்கள் மீது கற்கள் வீசி தாக்கப்படும் சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in