ஓய்வு பெறும் நாளில் பணியில் அமர்த்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி... ஆந்திராவில் பரபரப்பு!

ஏ.பி.வெங்கடேஸ்வர ராவ்
ஏ.பி.வெங்கடேஸ்வர ராவ்
Updated on
2 min read

ஆந்திராவின் மூத்த காவல் துறை அதிகாரியான ஏ.பி.வெங்கடேஸ்வர ராவ் ஓய்வு பெறும் நாளில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆட்சியின் போது மாநில உளவுத்துறை தலைவராக பணியாற்றியவர் வெங்கடேஸ்வர ராவ். அப்போது அவர் அரசு விதிகளைப் பின்பற்றாமல் இஸ்ரேலில் இருந்து ஏரோஸ்டாட் மற்றும் ஆளில்லாத வான்வழி வாகனங்கள் (யுஏவி) போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து வெங்கடேஸ்வர ராவ் 2020 பிப்ரவரி 8-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை 2022 ஏப்ரல் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், அகில இந்திய சேவை அதிகாரியை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது என உங்ததரவிட்டது. இதனையடுத்து வெங்கடேஸ்வர ராவ் மே 2022-ல் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஆந்திரா மாநில அரசு, வெங்கடேஸ்வர ராவை அச்சு மற்றும் எழுதுபொருள் ஆணையராக நியமித்தது. இந்த நிலையில, அவர் மீதான குற்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், அவர் சேவையில் தொடர முடியாது என்ற காரணத்திற்காகவும், சாட்சிகள் மீது அவர் செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி அவர் மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (சிஏடி) வெங்கடேஸ்வர ராவ் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான விவாதங்களின் நீண்ட விசாரணைக்கு பிறகு 2024 மே 8-ம் தேதி வெங்கடேஸ்வர ராவ் இடைநீக்கத்தை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது. அப்போது, ஒரே காரணத்திற்காக ஒரு அதிகாரியை இரண்டு முறை இடைநீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.

ஏ.பி.வெங்கடேஸ்வர ராவ்
ஏ.பி.வெங்கடேஸ்வர ராவ்

அத்துடன் ராவை மீண்டும் அனைத்து ஊதியம் மற்றும் படிகள் மற்றும் பிற பலன்களுடன் பணியில் சேர்க்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், சிஏடியின் உத்தரவை எதிர்த்து மே 21-ம் தேதி மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுகியது. சட்டத்தின் பிழைகள் மற்றும் விபரீதமான மற்றும் பதிவுகளுக்கு முரணான சில கண்டுபிடிப்புகளால் சிஏடியின் உத்தரவு சிதைக்கப்பட்டது என்று அது வாதிட்டது.

இந்த நிலையில், வெங்கடேஸ்வர ராவை மீண்டும் பணியில் அமர்த்த தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி இன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து வெங்கடேஸ்வர ராவ், அச்சு மற்றும் எழுதுபொருள்ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in