ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் ‘பிளேடு’... பத்திரிகையாளர் பாய்ச்சலுக்கு விமான நிறுவனம் சமாளிப்பு

ஏர் இந்தியாவில் பரிமாறப்பட்ட உணவில் பிளேடு
ஏர் இந்தியாவில் பரிமாறப்பட்ட உணவில் பிளேடு
Updated on
2 min read

ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் ’பிளேடு’ ஒன்றினை கண்டறிந்த பத்திரிகையாளரும், அவரை சமாதானப்படுத்த முயன்ற விமான நிறுவனமுமாக சமூக ஊடகங்களில் தற்போது கவனம் ஈர்த்துள்ளனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் துண்டான மனித விரல் முதல் பூரான் வரை ரகம்ரகமான அதிர்ச்சிகள் கடந்த சில தினங்களாக மக்களை அலற வைத்து வருகின்றன. தரையில் மட்டுமல்ல வானில் பறக்கும் விமானத்தில் பரிமாறப்படும் உணவுகளும் இவற்றில் விதிவிலக்கல்ல. அப்படி அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பறந்த பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியாவின் ஏஐ 175 விமானத்தில் பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு, மாதுரேஸ் பால் என்ற பத்திரிகையாளர் அண்மையில் பயணித்தார். விமானப் பயணத்தின்போது அவருக்கு பரிமாறப்பட்ட உணவை மென்றபோது உலோகத்துண்டு ஒன்று வாய்க்குள் உறுத்தியுள்ளது. அந்த உலோகத்துண்டு தொண்டைக்குள் நழுவும் முன்னர் சுதாரித்தவராக அதனை வெளியே எடுத்து பரிசோதித்துள்ளார். அப்போது அந்த உலோகப்பொருள் பிளேடு ரகத்தை சேர்ந்த என தெரிய வந்ததில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

”அதிர்ஷ்டவசமாக அந்த பிளேடு போன்ற பொருளினால் எனது வாய்க்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவே ஒரு குழந்தையாக இருந்திருப்பின் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்?” என்று தனது அதிர்ச்சி அனுபவத்தை பதிவிட்டதோடு, அவை தொடர்புடைய படங்களை பகிர்ந்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருக்கிறார் பத்திரிகையாளார் பால்.

இதனையடுத்து செய்தியாளரை தொடர்பு கொண்ட விமான நிறுவனம் அவரை சமாதானப்படுத்த முயன்றதாம். இதற்காக ஏர் இந்தியா விமானங்களில் செல்லுபடியாகக் கூடிய, ஓராண்டுக்கான ஒரு வழி வணிக வகுப்பு டிக்கெட்டுகளை வழங்க முன்வந்ததாம். ஆனால் இந்த வாய்ப்பை தான் நிராகரித்துவிட்டதாகவும், இதுவும் ஒருவகையான லஞ்சமே என்றும் சாடியுள்ளார்.

இதனிடையே பத்திரிகையாளர் மதுரேஸ் பால் எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஏர் இந்தியா நிறுவனம், காய் வெட்டும் இயந்திரத்தின் பிளேடு தவறுதலாக பயணிக்கு பரிமாறப்பட்ட உணவில் சேர்ந்து விட்டதாக விளக்கம் தந்துள்ளது. ஆனபோதும் விமான பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் ஏர் இந்தியாவை தொடர்ந்து சாடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in