தொடர் தோல்விகளை சந்திக்கும் அதிமுக: விரக்தியில் மொட்டையடித்த தொண்டர்!

மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்
மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், மனமுடைந்த அதிமுக முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் மொட்டை அடித்துக் கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. இந்த தேர்தலில் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக, பாஜக கட்சிகள் படுதோல்வி அடைந்தன.

முக்கியமாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளில் ஒன்றான அதிமுக, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு கட்சிக்குள் ஏற்பட்ட பிரிவே காரணம் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி.தினகரன் என மூன்றாக உடைந்ததால், அதிமுக தொடர்ந்து தோல்வியை பெற்று வருவதாக தொண்டர்கள் குமுறலில் உள்ளனர்.

தொடர் தோல்வியில் அதிமுக
தொடர் தோல்வியில் அதிமுக

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாததால், அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆலத்தூர் நாடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கொல்லிமலை ஒன்றிய துணை பெருந்தலைவராக இருந்த வரதராஜன் என்பவர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் மனமுடைந்து காணப்பட்டார். அதனால், புலம்பியபடியே மொட்டை அடித்துக் கொண்டு, அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அந்த வீடியோவில், ‘அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றியை பெற முடியும்’ என்று புலம்பிக்கொண்டே மொட்டையடித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in