அதிமுக பிரமுகரின் கார் மோதியதில் 2 பேர் பலி; உறவினர்கள் சாலை மறியல் - பழனியில் பரபரப்பு

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
Updated on
2 min read

பழனி அருகே அதிமுக நிர்வாகி கார் மோதி இருவர் உயிரிழந்தனர். அதிமுக நிர்வாகியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகில் நேற்று அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி காரில் சென்றுள்ளார். அப்போது எதிரே கே.வேலூரை சேர்ந்த கருப்பணன் (55) ,சண்முகம் (40) என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அந்த நபர்கள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்பணன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சண்முகம், பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சண்முகமும் உயிரிழந்தார்.

அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி
அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி

இதையடுத்து, முத்துசாமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். காரில் வந்து விபத்து ஏற்படுத்திய அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்று தரக் கூறியும் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பழனி அரசு மருத்துவமனை
பழனி அரசு மருத்துவமனை

சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பழனி- திண்டுக்கல் சாலையில் நடந்த மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in